Blog 2: அவள் யார் ?

This poem is written by Partha
நான் பெற்ற துன்பம்
அவள் தந்தாள் தினமும்
காலை மாலை மதியம்
அட்டியில்லை எப்பொழுதும்…
.
அவளுக்கு நான் வேண்டும்
என்னருகில் எப்போதும்  இருப்பாள்
என்னை சுற்றியே வலம் வருவாள்
தன் எண்ணம் ஊர் தெரிய திரிவாள்
அவள் நோக்கில் உண்டு கூர்வாள்
என்னை விட்டு பிரியாள்
ஊர்தியில் வருவாள்
ஆகாய புகை ஊர்தி ஆகாது
என்பாள்
என்னுடல் கவர் கவர்ச்சியால்
என்னை விட்டு பிரியாள்
கூடவே வர……
நெல்லையில் தொல்லை
சென்னையில் தொல்லை
தில்லையில் தொல்லை
திருச்சியில் தொல்லை
மதுரையில் தொல்லை
கோவை யில் தொல்லை
இரவில்
காதோடுதான் பேசுவாள்
உடலோடுதான் ஒட்டுவாள்
ஒரு பொட்டு தூக்கம் இன்றி செய்வாள்
காதல் பசியுடன் கவ்விய இடமெல்லாம்
கன்னி போக செய்வாள்
கன்னி அவள்
கள்ளி அவள்
துடிக்கும் உதடுகள்
உறிஞ்சும் ஆணிவேர்கள்
எச்சில் பட முத்தமிடுவாள்
தூங்காது தடுக்க அவள்
பாட்டும் பாடுவாள் காதில்
வேறு வழி தெரியாது
நான்
down and out
ஆகும்போது
*ALL OUT*
என கத்த என் பணியாள்
ALL OUT-ஐ மின் இணைப்பில் பொருத்த என்னை அணைக்காது நீங்குவாள்
*அவள்*
அந்த கடன்காரி
Anopheles mosquito எனும்  கொசு !
சரிதான்!
இதற்தாகுதானா இந்த கதை
அது சரி
என நீங்கள் சொல்வது சரி..
ஆறுவது சினம் !
கடிபட்டவனுக்குத்தான் தெரியும் அதன் வலி
இந்திய கொசுவின் கடியிலிருந்த தப்பிக்க ஓடிக்கொண்டிருக்கும்
பார்த்தா