The following Blog is written by Partha
Clickaty clack! Clickaty clack!
The train rumbles on a vintage track
Clickaty clack!Clickaty clack !
Grand old train on a steady track
குவலயத்தின் அவலங்கள்
பலவாகும்
சம்சார சாகரத்தின் நித்திய சோதனைகள் உறவாகும்
உறவுகளின் உறவே வாழ்வில் துணையாகும்
துணையற்றார் தனிமையே
பெரும் நோயாகும்
நோயும் துன்பப் பாயும் சேர்ந்தே வரும்
தேயும் காயம் காயும் மனமும் உருமாறும்
சேரும் உறவும் மாறும் நிலையும் நேரும்
நேரும் நேரம் மக்களுக்கு
மனதில் ஒரு சோகம்
Gone past five different stations
Been chugging along past six years
With such mix of comraderie and compassion
With fun and frolic toil and a few tears
சோகமற்ற வாழ்வு எல்லாம்
இன்பமயம்
இன்பமற்ற வாழ்வு எல்லாம்
சோகமயம்
இன்பம் சோகத்தின்கலவி வாழ்க்கை என்போம்
நோய் தாக்க அஃது நம் யாக்கையை வியாதி என்போம்
Done and dusted medical education
Gone were the days of care free abandon
Tone of training and tune of career gave choices
Honed in skills and experience changed places
For the better or worse we did trade places
Guided by elders,teachers and friend’s graces !
அவர்க்கு உதவ நாம் கற்றோம் மருத்துவம்
தேவை வேண்டி அணுகுவர்
மாந்தர் நம்மிடம்
நோய் நாடி நோய்முதல் நாடி என்றும் நாம்
அவர் நலம்நாடி நோய் கடிதல் வேண்டிப்
கருணையும் அன்பும் காட்டி
புரிவம் மருத்துவம்
Married and harried had children and carried
The burden of matrimony to be in harmony
The nuances of a profession with passion
So much greater so hard to balance in unison
your spouse and children in need of your attention
Through thick and thin of life’s happy destination !
மருத்துவக் கலை அரிதாம்
ஆயின் எளிதல்ல
நோயதன் வீரியம் தாக்கமதன் மாட்டு காயம் போக்கவதனை மருத்துவர்
புரியும் சேவை
புரிதலின்றி அவரைத் தாக்கும் மாந்தர்
மறந்தார் அன்னார் உயிராய் ஏற்ற சூளுரை
“குற்றம் கடிவம் பற்றும் நோயின் ஏற்றம் தடுப்பம்
உற்ற நோயும் முற்றும் அற்றக் களைவம்” எனும்
தாரக மந்திரம் உயிர் மூச்சாய் பாடுபடும் அவரனைவர்க்கும் குடும்பம் உண்டு குழவிகள்
உற்றார் பெற்றார் மற்றார்
பசி பட்டினி ஏக்கம் தூக்கம்
சுகம் துக்கம் அகம் அனைத்தும் இருந்தும் காலம் நேரம் இரவு பகல்
பொழுதுகளெனப் பேதம்
பாராது உழைப்பவர்க்கு
விளையும் இயற்கை வினைக்கு
அடியும் உதையும் முடக்கும்
வழக்கும் அடக்குமுறை தான்
விதி முறையா ?
மடுக்கும் சேவை தேவையின் மாந்தர் கொடுக்கும் நன்றியின்
வரையறையா ?
வாடிக்கையான உன்னத சேவைக்கு
விதித்தது விதியின் வீண் சதியா
மதி கெட்டோரின் மமதையின் களியாட்டமா ?
எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு
தெய்வப்புலவன் வாக்கு
அன்று சொன்னான் இவர்க்கு !
Doctor bashing seems to be the current fashion
Forgetting the sacrifices made as a profession
Legal cases mushrooming in a profusion
Have the masses got the doctor’s role in a confusion ?
There may be some bad apples along the way
To tar every one with same brush is not the right way
To express anger beating up a doc isn’t the way
To address any grievance to resolve a better way
Is to understand that doctors are anyway
Just mortals and fallible
outcomes in someway
Helped by science,the HAND OF GOD in a big way
Playing a major role always in some way !
போற்றுவர் போற்றட்டும்
புழுதி வாரி ……..
தூற்றுவர் தூற்றட்டும்
என் கடன் பணி செய்வதே !
God help me
Partha