உயிர்

The following Blog is written by Partha
*உயிர் என்றால் என்ன ?
*ஒரு கவிதையில் சொல்ல முயல்வோமா?
——————————————————————————–
*கவிதையே உனக்குள் தோன்றியது* *கேள்வியா ?*
*உயிரை சுமக்கும் உடலின் வேள்வியா ?*
*மனதை தொட்ட புரியாத புதிரா ?*
*உன் வரிகள் தேடும் அறியாத பொருளா ?*
*மென் பொருளானால் *அதன் இயக்கம் எதனால் ?*
*எப் பொருளையும் ஆக்கும் அவனாலோ ?*
*நெல்மணி பூமி பிளக்க* நிமிரும் *நெற்கதிர்*
*இல்லா உவமைக்கு* *ஈடானவள் அம்மை*
*எல்லா துடிப்புகளுக்கும்*
*சொல்லாகிய அம்மா*
*உயிர் தந்தவள்*
*உயிர் துறந்தால்* *உயிரிழந்தது போல் உணர்வதேன் ?*
*அப்படியாயின்* *அம்மாதான் உயிரா ?*
*அப்படி என்றால் இழந்தது யார் உயிர் ?*
*அன்பென்பது உயிரா*
*உயிரென்பது அன்பா ?*
*உயிர் உடலின் ஒரு  துடிப்பென்றால்*
*துடிப்பின் நாடிதுடிப்பை ஊக்குவது உயிரா ?*
*உடற்குள் துடிக்கும் அது  ஒரு உணர்வா ஓர் அசைவா ?*
*உடலை அசைப்பது உயிரென்றால்*
*உயிரை அசைப்பது எது /யார் ?*
*உயிரின் துடிப்பே மூளை இதயத்தின் இயக்கம்*
*உயிரின் உயிர்ப்பு ஆன்மா*
*ஆன்மாவின் விழிப்பு அவன்*
*ஆன்மா இறையை* *உணரும் பிரக்ஞை*
*உடலுள் உயிரால் பிரக்ஞை வருவதில்லை*
*கடவுள் அன்பால் உன்பால் பணித்த ஆஞ்ஞை அது*
*கவிதையே நீயும்* *கண்டாயோ தேடிய பொருளை ?*
*படிக்க அதை விடை கிடைத்ததோ உன் கேள்விக்கும்  ?*
உயிர் தொடர்ந்திட…
உயிரான நான் ஆணோ பெண்ணோ அதுவோ அல்ல
உயிரான நான் ஒரு தோன்றலின் சலனம்
உயிரான நான் இயற்கையான சேர்க்கையின் கனி
உயிரான நான் இரு இதயங்கனிந்த அன்பின் ஊற்று
உயிரான நான் பிறப்பின் தோழன் இறப்பெனும் தமையனின் இளையோன்
உயிரான நான் பால் அஃறிணை பேதம் ஏதும் கண்டதில்லை
உயிரான நான் அண்டசராசரத்தின் ஒரு புள்ளியின் சலனம்
உயிரான நான் உடலெனும் அரங்கத்தில் ஆடிடும் அந்தரங்கமான
நடனம்
உயிரான நான்  யார்….. ???!!!
*உயிர் மீண்டும் உயிர்ப்பிக்கறது…..*
*உயிரான நான் உடலெனும் ஒன்பது கால் திறந்த வாயில் மன்றத்தில் நின்றாடும் தென்றல்*
*உயிரான நான் உடலெனும் பொய்கால் குதிரையின் மெய்யான புதிரான நாட்டியம்*
*உயிரான நான் உடலின் கட்புலம் காணா நுட்பமாம் மனத்திட்பம் காண் அருட் செல்வம்*
*உயிரான நான் உடலெனும் திறந்த மண்டபத்தில் யாரோ ஏற்றி வைத்த கண்மூடா அணையா  அகல்*
*உயிரான நான் உடலெனும் நாளின் மனம் எனும் இரவு பார்க்காத பகல்*
*உயிரான நான் உடலெனும் அவனிசூழ் ஆழ்கடல் வாழ் நாள் எல்லாம் உள்ளாடிடும் கயல்*
*உயிரான நான் உடலெனும் நீள் கடலில் நின்றாடிடும் நிற்காத அலை*
*உயிரான நான் உடலெனும் மீனவனின் வலை சிக்கிய வாளை*
*உயிரான நான்* *உடலெனும் பயிரின்*
*உள்ளோடும் நாளத்தின்* *நீர்*
*உயிரான நான் பிறந்து இருந்த மறையும்  உடலெனும் இறை தந்த ஆடைமூடிடும் உண்மையாம் மேனி*
*உயிரான* *நான்* *காணும்*
*பொய்மை எனும்* *உடலில் தூய்மையாய் ஆசானாய் அறிவாய் தெரிவாய் புரிய எனை   என்றும் இயக்கும் கருவியாய் கடவுளாய் காப்பாய்* *நீ*
Partha