அம்மா

அம்மா ஜனிப்பின் முதல்
அம்மா காற்றையும் உயிர் மூச்சையும் இணைத்த சொந்தம்
அம்மா ஈரைந்து மாதம் சூல் கொண்ட கொடியால் செந்நீர் ஈந்து வளர்த்தாள்
அம்மா செந்நீரை வெண்அமுதாக்கி
என் பசி போக்கியவள்
 அம்மா என்பது வார்த்தை அல்ல
அது என் வாழ்க்கையின்  சரித்திரம்
அம்மா என்பது ஒரு அழைப்பு அல்ல
அன்பாய் பெய்யும் அடை மழை
அம்மா என்பவள் தனி மரம் அல்ல
பரிவு எனும் சென்றல் வீசும் தோப்பு
பாசம் எனும் வாடாமலர் பூக்கும் பூங்காவனம்
அம்மா வீட்டின்ஒரு அங்கம் மட்டும் அல்ல
அவள் ஒரு தங்க சுரங்கமான ஒரு
சகாப்தம்
அம்மா இடும் உணவு அமுதல்ல தேவாமிர்தம்
 அம்மா வின் கை அவளின் ஓர் அங்கமல்ல
 நம் உயிர்  காக்கும் ஜீவாதார கவசம்
அம்மாவின் வாக்கு பண்பின் அங்குசம்
அம்மா எனும்  உச்சரிக்கும் நித்ய மந்திரம்
மன வலி எடுக்கையில் உச்சரிக்க கடிந்திடும் யந்திரம்
அம்மா கடைசி மூச்சின் முடிவான சுவாசம்
அம்மா உனை போற்றும் வார்த்தைகள் ஏராளம்
அம்மா அவ்வார்த்தைகளை அள்ளி தெளிக்க
 என் வாழ் நாட்களின் தாராளம்  போதாதே
அம்மா…………………….…………………….!!!!!?????
Partha