அன்புத் தோழி/தோழனே வாழிய நீ

அன்புத் தோழி வாழிய நீ
அன்பே மூச்சாய் வாழும் நீ
பண்பாய் அதுவாய் வாழும் நீ
பரிவும் பாசமும் பொழியும் நீ
உற்றம் சுற்றம் யாவும் நீ
உற்றவை கற்றவை பழகும் நீ
மகவாய் பிறக்க அன்றும் நீ
சேயாய் வளர தாய்க்கும் நீ
இன்பம் தந்தாய் அச்சனுக்கும் நீ
கருத்தாய் கற்றாய் கல்வி நீ
வளர்ந்தாய் சிறந்தாய் வனிதை நீ
மருத்துவம் திருத்தமாய் படித்தாய் நீ
பட்டம் பாங்காய் பெற்றாய் முடித்தாய் நீ
பெற்றோர் உவகை பெறவே நீ
தேர்ந்த துணையுன் சேர்ந்தாய் நீ
பெற்று வளர்க்க மக்களை நீ
எடுத்து வளர்த்தாய் கண்ணாய் நீ
அவர்க்கும் காலத்தில் கருத்தாய் நீ
மணவிழா முடித்து மகிழ்ந்தாய் நீ
உச்சி முகர விழைந்து நீ
மகிழ பேரன் பேத்தி எடுத்தாய் நீ
நண்பர் சூழ நாட்டமாய் நீ
நல்லறம் சூழ சிறக்க  வாழ்ந்தாய் நீ
அன்பின் நிழலில் வாழ்வாய் நீ
அன்பே சிவம் என என்றும்  நீ
அதுவே தவமாய் இருந்தாய் நீ
சிவமே தவமாய் வாழ நீ
என்றும் வாழ்த்துவேன் நான் வாழிய நீ
அன்பும் பண்பும் வாழ நீ
தொடர்ந்திட சேவை செய்வாய் நீ
தஞ்சாவூர்  பிறவூர் எதுவும் என்றாலும்
நிறையாய் மறையாய் வாழ்வாய் நீ
தோழனே உனக்கெனவும் செப்பியதாய் ஏற்பாய் நீ
அன்புத் தோழி வாழிய நீ
அன்புத் தோழா வாழிய நீ
அன்புடன்
Partha